Wednesday, November 2, 2011

உன் முகம்

வெற்று சுவரிலும் 
உன் முகம் ,
நினைக்கும்போதே 
எட்டி பார்க்கும் 
கண்ணீர் துளின் முகம் ..
எப்பொழுதும் உன்னை நினைத்திருப்பேன் ,
எப்பொழுதாவது என்னை நீ 
நினைக்க மாட்டாயா ! என்று .

மழை...

மழையும் கூட
காதலை போலவே
எதிர்பாராத நேரத்தில்
கொட்டி நம்மை
நனைத்து விடுகிறது.....

என்னுயிரே.......



என்னுயிரே.......
நீரில் நீந்தும் மீனும்
நீ இல்லாத நானும்
இந்த உலகில்
ஒரு சின்ன வேற்றுமையால்
வேறுபடுகிறோம்.
என்ன வித்தியாசமென்று
உனக்கு சொல்கிறேன்... கேள்......
மீன்கள் தண்ணீரில் வாழ்கிறது...
நான் கண்ணீரில் வாழ்கிறேன்......

என்ன செய்தாய் என்னை....!!!!

நினைக்கும்
பொருளில்
எல்லாம்
உந்தன்
நினைவுகள் தானடா 

உச்சரிக்கும்
சொல்லில்
எல்லாம்
உந்தன்
பெயர்
ஓசை தானடா

சுவாசிக்கும்
காற்றில்
எல்லாம்
உந்தன்
வாசனை தானடா

நீ என்னுடன் தான் இருக்கிறார்
என்றாலும்
எனக்குள் என்னடா
இவ்வளவு
போராட்டம்

உன்னை
அன்றி
நாட்கள்
ஒவ்வொன்றும்
நரகமாய் கழிகின்றன

கண்களை
மூடினால் கூட
இமைகளுக்கு
நடுவில் நிற்கிறாய்

என்ன செய்வது என்று தெரியாமல் உன்னிடமே கேட்கிறேன்
என்ன செய்தாய் என்னை....!!!!

பூ

பூ
உதிர்வதாலும்
பூகம்பம் வரும்
என்பது காதலிக்கும்
வரை
தெரியாது..♥

Friday, September 16, 2011

உன் புன்னகை...

உன் புன்னகை ஒன்றே போதும்
என் அனைத்து கவிதைகளையும் 
தோற்கடிக்க.. 

Tuesday, September 13, 2011

நீ ...

உன்னை மறக்க  
எதை நினைத்தாலும் 
அதுவாகிறாய்...!

நினைவுகள் ...

இறந்துவிட்ட நினைவுகளுக்காக
இன்னமும் அழுதுகொண்டிருப்பது
என் கவிதைகள் மட்டும்தான்...! 

நீ..

நீ இல்லாமல்
அழுவதற்கு துணையாய்
மெழுகுவத்தியும்
கவிதைகளாய் என் பேனாவும்..! 

நினைவு ..!

பேசி 
அழவைக்க
மிச்சமிருக்கிறது 
கொஞ்சம் கவிதைகளும் 
கடிதங்களும்...! 

யோசனை..

நீ யோசித்தும் 
நான் யோசித்தும் 

ஒன்றாய்  தான்
இருக்குமென்று   

நான் 
யோசிக்கவேயில்லை..!

பிரிவு ..!

விலகலாம் என்றெண்ணி 
எதிரெதிர் திசையில் பயணிக்க துவங்கினோம்..
அப்பொழுது  நாம் அறிந்திருக்கவில்லை,
நாம் பயணிக்க போவது வட்டப்பாதையில் என்று...!

மீண்டும் சந்திப்போம்.. !

எனது பயணங்கள்
உனது வழிகாட்டுதலில்...
மீண்டும் சந்திப்போம்.. !

--- பாசில்

கவிதை..

என் கவிதைகளில்
நீ இருந்தால்
பரவாயில்லை...

என் கவிதைத்
தலைப்புகளிலும்
நீயாகத்தான்
இருக்கிறாய்...!!!

பயணம்..

உன்னுடன்
சேர்ந்து நடக்க
ஆரம்பித்த
பிறகுதான்
சாலை ஓர
மரங்களிலிருந்து
உதிரும்
பூக்களின் மௌனத்திலும் நான்
இசை
கேட்க
ஆரம்பித்தேன்..!

நீ..

உனக்கு சிறகுகள் இல்லை
ஆனாலும்
நீ என் தேவதை. .

சந்திப்பு ...


"இனி பார்க்க வேண்டும் என்கிற
ஆசை வருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப் பார்த்துக் கொள்ளலாம்
எங்காவது ஒரு புள்ளியில்
நம் பார்வைகளாவது
சந்தித்துக் கொள்ளட்டுமே"
                                                 -- பாசில் 

நினைவுகள்..!

சில நினைவுகள் எப்போதாவது வரும்,
புன்னகையைப் போல.
உன் நினைவுகள் எப்போதும் என்னுடன் இருக்கும்,
மூச்சு காற்றுப் போல.




Sunday, January 16, 2011

அன்பு..

நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை..
உன்னை கை விடுவதும் இல்லை....