Friday, August 23, 2013

என்ன
மாயம் செய்தாய்.??
உன்
நினைவுகளை மட்டும்
முகவரியாக கொண்டு
தேடுகிறேன்
முகம் காட்டி போ பெண்ணே...(
"கடைசிவரை தூங்கவே முடிவதில்லை
உன்னை நினைத்துக் கொண்டே
தூங்கிவிட வேண்டுமென
நினைக்கிற நாட்களில்."

"என்னிடம் மாற்றம் இருப்பதாய் நிறையப் பேர் சொன்னார்கள் திரும்பிப் பார்த்தேன் உன் சாயலில் என் நிழல்."

"எந்தக் கவிதையும் உன்னை நினைத்துக் கொண்டு எழுதுவதில்லை . எழுதுகிற எந்தக் கவிதையிலும் நீ இல்லாமல் இல்லை."

"மயிலிறகால் வருடியது போதும்
தோளில் சாய்ந்து கிடப்பவளே
கேசத்தை சரி செய்து கொள்."