Saturday, September 28, 2013

ஒருநாள் வரும்
அந்த நாளின் முடிவிலும்
இன்னொரு நாள் வரும்
இதில் எந்த நாளை நான்
எனக்கானதாய் எடுத்துக்கொள்ள போகிறேன்....

ஒரு நாள் கட்டாயம் வரும்....
பிரிதொரு நாளில் 
நீ கேட்கும் மன்னிப்புக்காய்
நான் இன்றே மன்னிக்க துவங்கி விட்டேன்....

காதலிக்கவும்........

Tuesday, September 10, 2013

காதல் கவிதைகள் எழுதுபவர்கள் எப்போதும் 
காதலித்துக்கொண்டே இருப்பார்கள் என்றல்ல!

Tuesday, September 3, 2013

அழுவதற்கும் தொழுவதற்கும் 
ஆறாய் திறந்துவிட்டு...
ஆனந்தப்படும் போது மட்டும் 
அவசரம் அவசரமாய் துடைத்து எறிகிறோம் கண்ணீரை!
சிக்கித்தவித்த மீள இயலா 
பேரிரைச்சலினின்று மீட்டெடுக்கிறது எழுத்து!
சொப்பனங்களின் கடைசி நிமிட பதற்றமோ, 
இன்பமோ இமைகள் முத்தமிட்டுக்கொள்ளும்வரை மட்டுமே!
நட்பாய் மாறிய காதலை வைத்துக்கொண்டு 
புன்னகையை தேடிக்கொண்டிருக்கிறாய் நீ, 
மழை தேடும் பிளவு பட்ட நிலம் போல!

Friday, August 23, 2013

என்ன
மாயம் செய்தாய்.??
உன்
நினைவுகளை மட்டும்
முகவரியாக கொண்டு
தேடுகிறேன்
முகம் காட்டி போ பெண்ணே...(
"கடைசிவரை தூங்கவே முடிவதில்லை
உன்னை நினைத்துக் கொண்டே
தூங்கிவிட வேண்டுமென
நினைக்கிற நாட்களில்."

"என்னிடம் மாற்றம் இருப்பதாய் நிறையப் பேர் சொன்னார்கள் திரும்பிப் பார்த்தேன் உன் சாயலில் என் நிழல்."

"எந்தக் கவிதையும் உன்னை நினைத்துக் கொண்டு எழுதுவதில்லை . எழுதுகிற எந்தக் கவிதையிலும் நீ இல்லாமல் இல்லை."

"மயிலிறகால் வருடியது போதும்
தோளில் சாய்ந்து கிடப்பவளே
கேசத்தை சரி செய்து கொள்."

Saturday, May 11, 2013

போராடுவோரை தீவிரவாதிகள் என்கிறோம்..

விளையாடுவோரை வீரர்கள் என்கிறோம்..!

#என்ன உலகமடா இது???
மூன்று வரியில் உன்னை எப்படி முழுதும் வர்ணிப்பேன்? ?

அதனால் தான் வெறுக்கிறேன் ஹைக்கூவை...!

#தேவதை அவள்#்
புதுப் பேனா வாங்கியதும் எழுதி பார்க்கும் போது...
உன் பெயர் கிறுக்கும்் ...
என் கை அழகடி...!

எதிரில்் நீ வருவதை பார்தததும்...
எனையறியாது வரும் வெட்கமும்் அழகடி...!

தனியே பைக்கில் செல்லும் போதும் ...
பின்னே உட்காராத உன்னை கண்ணாடியில் தேடும் ...
என் கண்கள் அழகடி...!

இப்படி என்னுள் இருக்கும் உன்னை தேடும் ...
நான் என்றும் அழகடி...!

#உன்னால் அழகானேன்.
நெடிய பயணம் ...
நீண்ட தூரம்...
தொலைவை கடக்க... நீயும் வேண்டும்...!

பாதை மறந்தும் பயணம் தொடரும் ...
பக்கத்தில் நீயும் ... வேறென்ன வேண்டும்?

வலிகள் சொல்ல வரிகள் போதும் ...
புரிந்து கொள்ள நிமிடம் வேண்டும்...!

தேவதை நீயும் துணையாய் வந்தால் ...
கால்கள் நடக்கும் தூரம் மறக்கும் ...!

# என் பயணங்களின் துணையாக நீ...!