மூன்று வரியில் உன்னை எப்படி முழுதும் வர்ணிப்பேன்? ?
அதனால் தான் வெறுக்கிறேன் ஹைக்கூவை...!
#தேவதை அவள்#்
புதுப் பேனா வாங்கியதும் எழுதி பார்க்கும் போது... உன் பெயர் கிறுக்கும்் ... என் கை அழகடி...!
எதிரில்் நீ வருவதை பார்தததும்... எனையறியாது வரும் வெட்கமும்் அழகடி...!
தனியே பைக்கில் செல்லும் போதும் ... பின்னே உட்காராத உன்னை கண்ணாடியில் தேடும் ... என் கண்கள் அழகடி...! இப்படி என்னுள் இருக்கும் உன்னை தேடும் ... நான் என்றும் அழகடி...!
#உன்னால் அழகானேன்.
நெடிய பயணம் ... நீண்ட தூரம்... தொலைவை கடக்க... நீயும் வேண்டும்...!
பாதை மறந்தும் பயணம் தொடரும் ... பக்கத்தில் நீயும் ... வேறென்ன வேண்டும்?
வலிகள் சொல்ல வரிகள் போதும் ... புரிந்து கொள்ள நிமிடம் வேண்டும்...!
தேவதை நீயும் துணையாய் வந்தால் ... கால்கள் நடக்கும் தூரம் மறக்கும் ...!